• Sinhala (Sri Lanka)
  • English (United Kingdom)
    Font size
  • Increase font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி அறிமுகம்

அறிமுகம்

அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு உரித்தான வர்த்தக நிறுனங்களை 1978 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பனிகளாக மாற்றியமைக்கின்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உரக் கூட்டுத்தாபனமானது, வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனியாக மாற்றியமைக்கப்பட்டது.

இவ்வாறு மாற்றியமைப்பதற்கான சட்ட ரீதியான அதிகாரம் கிடைத்தது 1992 செப்தெம்பர் 15 ஆம் திகதி முதலாகும். லங்கா உரக் கம்பனி 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தற்போது இலங்கையில் பதிவு செய்துள்ள அரசாங்க கம்பனியொன்றாக இயங்கி வருகின்றது. வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனியின் குறிக்கோளாக இருப்பது அதன் முன்னோடி நிறுவனமான 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசாங்க கைத்தொழில் கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக தாபிக்கப்பட்ட இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வெற்றிகரமான 2 வியாபார நடவடிக்கைகளையும் பேணிவருவதற்கு செயற்படுவதாகும்.

இக்கம்பனி நாடு முழுவதும் சந்தைப்படுத்தல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உதவிக் களஞ்சியசாலைகள் வலையமைப்பின் ஊடாக விவசாயத்துறைக்கு உயர் தரமிக்க உற்பத்திகளை வழங்குவதன் ஊடாக இலங்கையில் விவசாய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக பாரியளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

மேற்கோள்வாசகம்

“நாம் வழங்குவது உரம் - நீங்கள் பெற்றுக் கொள்வது விளைச்சல்”

நோக்கு

“இலங்கை உரச் சந்தையின் முன்னோடியாக விவசாயத்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட புதிய உற்பத்திச் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை வழங்குகின்ற பலதரப்பட்டதாக உள்ள புதிய உலகிற்கு பொருத்தமான முன்னோடி நிறுவனமாதல்”

செயற்பணி

அரசாங்க கொள்கைகளுக்கு அமைவாக லக் உரக் குடும்பத்தின் உச்ச பங்களிப்புடன் இலங்கையில் விவசாய மற்றும் கமநல சேவைகள் துறையின் உற்பத்தி, வருமானம் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு சந்தைசார் கேள்விக்கு ஏற்றவாறு உர உற்பத்தி மற்றும் விற்பனையின் மூலம் கம்பனியின் இலாபகரமான நிலைத்திருத்தலை உறுதி செய்தல்.

நோக்கம்.

  • 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இரசாயன உரத்தை வழங்குகின்ற மற்றும் விநியோகிக்கின்ற சந்தையில் தலைமைத்துவத்தை அடைந்து கொள்ளல்.
  • EPS மற்றும் ROI  நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் ஆற்றலை மேம்படுத்தல் மற்றும் பங்குரிமையாளர்களுக்கு உச்சளவில் இலாபத்தை பெற்றுக் கொள்ளல்.
  • வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனியினால் வழங்கப்படுகின்ற உயர் தரத்தைக் கொண்ட உரம் தொடர்பில் உயர் மட்டத்திலான நன்மதிப்பை மேம்படுத்தி பேணிவருதல்.
  • ஊழியர்களை ஊக்குவிப்பதும், திருப்திப்படுத்துவதும்.
  • நிறுவன ரீதியாய சமூக பொறுப்பு (CSR) மற்றும் சுற்றாடல் தொடர்பான நீண்டகால நிலையான தன்மை (LTS) ஆகிய எண்ணக்கருக்களை அமுல்படுத்தல்.

இல. பெயர் கால அளவு
01 திரு. சாம் சில்வா
02 திரு. எல்.பீ. ராஜகருணா
03 திரு. ஏ.டீ.எம். மஹிந்த சில்வா
04 திரு. செனரத் நந்ததேவ
05 திரு. ஜே.எம். சுபாசிங்க
06 திரு. விக்டர் பி.டபிள்யு. ரத்நாயக்க
07 திரு. ஏர்ல் ஏ. ஜயவிக்கிரம
08 திரு. சீ.ஆர். குருப்பு
09 திரு. டபிள்யு.ஆர்.பீ. ராஜகருணா
10 திரு. பியசேன சேனரத்ன
11 திரு. என். சமதேவ
12 திரு. திலக் கொள்ளூர்
13 திரு. டி.பீ. கங்கொட
14 திரு. சுனில் ஜயந்த நவரத்ன
15 திரு. பீ.எஸ். ஜகத் பெரேரா
16 திரு. டபிள்யு.என்.ஜே. த மெல்
17 திரு. ரொஹான் லலித் த அல்விஸ்
18 திரு. விக்டர் சமரவீர (பதிற்கடமை)
19 திரு. சீ.பி. அத்துலுவாகே (பதிற்கடமை)
20 திரு. என்.எஸ்.எம். சம்சுடீன்
21 திரு. லலித்காந்த ஜயசேகர
22 திரு. புந்திக மதிஹாவெவ 2008.02.18 - up to date

Last Updated on Tuesday, 14 February 2017 12:11  

கேள்விப்பத்திரம்

JA Content Slide Error: There is not any content in this category

What's New