• Sinhala (Sri Lanka)
  • English (United Kingdom)
    Font size
  • Increase font size
  • Decrease font size
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி தவிசாளரின் செய்தி

தலைவரின் செய்தி

அரச கொள்கைகளுக்கு ஏற்ப நிறுவனஞ்சார் இலக்கை அடைந்த அதேவேளையில் விசேடமாக இலங்கை விவசாய சமுதாயத்திற்கும் இலங்கை மக்களுக்கு நட்புறவான அரசொன்றின்  சேவைகளை வழங்கி இந்த யுகத்தின் தேவையாகியுள்ள உணவை இலகுவாக அடைவதற்கு அரசின் முயற்சிகளுக்குத் துணைபுரிவது எமது அடிப்படைக் கொள்கையாக உள்ளது.

இலங்கை வாழ்க்கைக்கும் விவசாயத்திற்கும் இடையே ஒரு மரத்திற்கும் அதன் பட்டைக்கும் உள்ளவாறான ஒரு மிக நெருங்கிய உறவு உண்டு. எனவே எமது நாட்டின் அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கான குறிகாட்டி ஒன்றாக விவசாயத்தின் அபிவிருத்தியைக் கருதலாம். இயற்கையின் பங்களிப்பான சூரிய ஒளியையும் மழையையும் உரிய காலத்தில் பெறுதல் பயிர்ச்செய்கை செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான பெரும் முதுகெலும்பாகும்.

நீர் வளத்தோடு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தின் வளம் மண்ணில் உள்ள கனிப்பொருள்களின் பொருத்தமான அளவில் தங்கியுள்ளது. ஆனால் மண்ணில் உள்ள குறைபாட்டினைத் தீர்ப்பதற்காக பல்வேறு வகைகளிலான உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மகிந்த சிந்தனைக் கொள்கைக்கு ஏற்ப தேவையை பூர்த்தி செய்தலுக்கு முந்துரிமை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்கப்படுகிறது. இதில் இலங்கை உரக் கம்பனியின் கடமை உரிய காலகட்டத்தில் பற்றாக்குறை இன்றி விவசாயிகளுக்கு நிவாரண விலைகளில் தேவையான அளவு உரங்களை வழங்குதல் ஆகும். இதனை அடைவதற்கு திட்டமிடப்பட்ட ஒரு செயலொழுங்கு தயாரிக்கப்பட்டுள்ளதோடு இத்திட்டத்தை அமுலாக்குவதற்காக வினையாற்றலுள்ள ஓர் ஆளணியும் 50 பிராந்திய களஞ்சியசாலைகளையும் மற்றைய உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் முன்னேற்றத்தையும் நிலைத்திறனையும் இலக்காகக் கொண்டு இலங்கை உரக் கம்பனி உரங்களின் பொருத்தமான வினியோகமான சவாலான பணியை மேற்கொள்வதில் வெற்றியீட்டி உள்ளது. அண்மைக் கடந்த காலத்தின் போது நிறுவனத்தின் முன்னேற்றத்தை அவதானித்த போது அது மிகவும் தெளிவாகியது. இப்பணியின் வெற்றிக்காக அதிமேதகு சனாதிபதி அவர்களது ஆசிர்வாதங்களையும் ஆலோசனையையும் விவசாய அபிவிருத்தியும் கமநல சேவைகளும் அமைச்சர் கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களதும் அமைச்சு அதிகாரிகளினதும் வழிகாட்டலையும் நான் நன்றியதலுடன் நினைவுகூற விரும்புகிறேன்.

மீள ஒழுங்கமைக்கப்பட்டு இப்போது புதிய அமைப்பில் உள்ள இந்நிறுவனம் நிதி, சந்தைப்படுத்துதல், மனித வளம், நலன்புரி, கொள்வனவு, வினியோகம், உள்ளகக் கணக்காய்வு, தகவல் தொழினுட்பம், கைத்தொழில், பாதுகாப்பு ஆகிய அலகுகளாகச் செயற்பட்டு அணி முயற்சியும் செயலொழுங்கும் ஊடாக அதன் இலக்குகளை அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் எதிர்கால நோக்குடன் பிணைந்துள்ள லக்பொஹர குடும்பத்தின் தைரியம், கடப்பாடு, திட்டமிடல் என்பவற்றின் ஊடாக அன்னை இலங்கை மீது புத்தொளியொன்றைப் பரப்புவதே எனது எதிர்பார்ப்பாகும்.


தலைவர்

Last Updated on Thursday, 12 February 2015 06:25  

கேள்விப்பத்திரம்

JA Content Slide Error: There is not any content in this category

What's New